கற்பவை கற்றபின் Karpavai Katrapin
Tamil Cinema Vimarsanam
( Vimarsanam)
பல புதுமுக நட்சத்திரங்களின் தொகுப்பாக இருக்கிறது, கற்பவை கற்றபின்.
பட்டுராம் செந்தில் இயக்குனராக அறிமுகமாக அகவொளி பிலிம்ஸின் தயாரிப்பில் வெளியான படம்,
கற்பவை கற்றபின்.
படத்தின் மூலக்கரு இந்தியாவில் பெருகி வரும் இளைஞர் தற்கொலைகள் பற்றியது.
உலகெங்கிலும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. தோல்வியால், விரக்தியால், அதிர்ச்சியால் வாழ்வின் விளிம்பில் நிற்பதாக எண்ணிக் கொண்டு மனமும், மூளையும் சேர்ந்து எடுக்கும் தவறான முடிவே தற்கொலை.
தற்கொலை செய்துகொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்மானமாய் முன்வைத்து அலசும் ஒரு படமாக கற்பவை கற்றபின் உள்ளது.
தேசத்திற்காக ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல. தற்கொலை செய்து கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் எழுகிறது?என்பதையும், கந்துவட்டியால் ஒரு குடும்பம் எவ்வாறு சீரழிகிறது? என்ற உண்மை சம்பங்களையும் வைத்து படமாக்கியுள்ளனர்.
கற்பவை கற்றபின் - கற்றுக்கொள்ளலாம்.
இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.