தாவணிக் காற்று

Thavani Kaatru Tamil Cinema Vimarsanam


தாவணிக் காற்று விமர்சனம்
(Thavani Kaatru Vimarsanam)

இயக்குனர் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் புதிரான மற்றும் விறுவிறுப்பான படமாக வெளியாகியிருக்கும் படம் தான், தாவணிக் காற்று.

இப்படத்தின் பல புதுமுகங்கள் உள்ளனர். புதுமுக கதாநாயகனாக தமிழ், புதுமுக கதாநாயகியாக ஆராத்யா நடிக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் வி.ஆர்.பி.மனோகர் நடித்திருக்கிறார்.

குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தெளிவான திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார், வி.ஆர்.பி.மனோகர்.

நெருங்கிய நண்பர்கள்,இருவரில் ஒருவர் பணத்திற்காக தன் நண்பரோடு சேர்த்து அவர் குடும்பத்தையும் கொல்லத் திட்டமிட்டு, கார் விபத்தில் கொன்றும் விடுகிறார். அதில் நண்பரின் மனைவியும்,மகனும் தப்பித்து விடுகின்றனர். தன் குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் நோக்கில் வளரும் நாயகன் தமிழ், ஒரு ஸ்டுடியோவை நடத்திவருகிறார். ஒரு நாள் போட்டோ எடுக்க வந்த நாயகி ஆராத்யா மீது காதல் கொள்கிறார். காதலி ஆராத்யா தன் எதிரியின் மகள் என்று தெரிய வர, நாயகன் என்ன செய்ய போகிறான்? என்பதை சுவாரஸ்யமான விறுவிறுப்புடன் இப்படத்தில் காணலாம்.

பாடல்கள் பரவாயில்லை.

தாவணிக் காற்று - காற்றால் தாவணி பறக்கும்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 17:35:57
1 (1/1)
Close (X)

தாவணிக் காற்று (Thavani Kaatru) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே