முண்டாசுப்பட்டி
Mudasuppatti Tamil Cinema Vimarsanam
(Mudasuppatti Vimarsanam)
ராம்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், முண்டாசுப்பட்டி.
படத்தின் கதாநாயகனாக விஷ்ணு, கதாநாயகியாக நந்திதா நடித்துள்ளனர். காளி வெங்கட் விஷ்ணுவின் நண்பராக வருகிறார்.
மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமம்,முண்டாசுப்பட்டி. யாரும் புகைப்படம் எடுக்காமல் வாழ்ந்து வருகிற கிராமம்.ஏனென்றால், உயிரோடு இருப்பவர்களை புகைப்படம் பிடித்தால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற பயம்.
புகைப்பட நிலையம் வைத்திருக்கும் கதாநாயகன் விஷ்ணு, முன்டாசுப்பட்டியில் வசிக்கும் ஒருவரை புகைப்படம் எடுக்கிறார். அதனால் அந்த கிராமத்தில் இருப்பவர்கள் விஷ்ணுவை சிறை வைக்கிறார்கள்.அங்கேதான் கதாநாயகி நந்திதாவை சந்திக்கிறார்.
அக்கிராமத்திலிருந்து விஷ்ணு எப்படி மீண்டு வருகிறார்? என்பதை இப்படத்தில் காணலாம்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.