அஞ்சான்

Anjaan Tamil Cinema Vimarsanam


அஞ்சான் விமர்சனம்
(Anjaan Vimarsanam)

இயக்குனர் என். லிங்குசாமி அவர்களால் வெளியாகிவுள்ள படம், அஞ்சான்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் சூர்யாவும், சமந்தாவும், வித்யுத் ஜம்வலும் நடித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் ராஜூ பாய்(சூர்யா) என்ற அண்ணனைத் தேடி கன்னியாகுமரியிலிருந்து செல்கிறார், கிருஷ்ணன் என்கிற சூர்யா. பல கேள்வியுடன் கிருஷ்ணன், ராஜூ வழக்கமாகச் செல்லும் இடங்களை விசாரித்து தெரிந்துகொள்கிறார். சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடி வந்த ராஜூ தனது நண்பனான சந்துருவான வித்யுத் ஜம்வலுடன் சேர்ந்து கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறார். ராஜூவும், சந்துருவும் நெருக்கமான நண்பர்கள் ஆகிறார்கள். வாலிப வயதிலேயே பெரிய தாதாக்களின் வேலைகளை செய்து வந்ததால் இவர்களுக்கு எதிரிகளும் ஏராளம்.

புதிய காவல்துறை மேல்அதிகாரி இவர்களது கூட்டத்தை அடக்க நினைக்கும் போது, காவல்துறை மேல்அதிகாரியை வழிக்கு கொண்டு வர அவரது மகள் ஜீவாவான சமந்தாவை, ராஜூ பாய் கடத்துகிறார். கடத்தலில் காதல் மலர்கிறது,இவர்களின் காதல் உல்லாசத்தில் தன்னுடைய நண்பனை மறக்கிறார், இதனால் சந்துரு எதிரிகளால் கொல்லப்படுகிறார், இது ராஜு பாய்க்கு மிகப்பெரிய அடியாக அமைந்து விடுகிறது. நண்பனைக் கொன்றவனைக் கொல்லவேண்டும் என்ற வெறியுடன் செல்லும் ராஜூ பாய் வழியிலேயே சுடப்பட்டு ஆற்றில் தள்ளப்படுகிறார் என்பது கிருஷ்ணாவுக்கு தெரிய வருகிறது. இடைவேளைக்குப் பின் வரும் சிறு திருப்பத்தையும், சமந்தாவின் நிலையையும் இப்படத்தின் மீதிக்கதையில் காணலாம்.

பட முன்னோட்டம் மட்டும் சிறப்பு.

யுவனின் இசையில் பாடல்களை ரசிக்கலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-14 19:08:24
(0)
Close (X)

அஞ்சான் (Anjaan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே