சலீம்

Salim Tamil Cinema Vimarsanam


சலீம் விமர்சனம்
(Salim Vimarsanam)

இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சலீம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய் அண்டனியும், கதாநாயகியாக அக்ஷா பர்டசனியும் நடித்துள்ளனர்.

நான் என்ற படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை பார்க்கலாம். மருத்துவப் படிப்பில் தேறிப் பின் ஒரு தனியார் மருத்துவமனையில் நேர்மையான மருத்துவராக பணியாற்றி வருகிறார் சலீம் (விஜய் அண்டனி). சக மருத்துவரான அக்ஷா பர்டசனியை காதலிக்கிறார். காதல், திருமணம் வரைக்கும் சென்று சில காரணங்களால் தடைபடுகிறது. இதற்கிடையில் சலீம் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் சமூக சீர்கேட்டை உருக்குலைக்கும் செயல் நடைபெறுகிறது. இதைக் கண்ட சலீம் அந்நிலையை தவறு என்று உணர்த்த நினைத்து அம்மருத்துவனையின் மேல் அதிகாரிகளுக்கும் , சக மருத்துவர்களுக்கும் அறிவுரை கூறினார். அம்மருத்துவனையின் உரிமையாளர்களும், சக மருத்துவர்களும் சலிமை ஒரு விருந்துக்கு அழைத்து மிகவும் அவமானப்படுத்தினார்கள். சலீம், இந்நிகழ்விற்கு பதிலடி கொடுத்த விதம் சிறப்பு. பின் சலிமின் பரபரப்பான செயல்களை விறுவிறுப்புடன் இப்படத்தில் காணலாம்.

விஜய் ஆண்டனியின் நடிப்பு இயல்பாக இருந்தது. பின்னணி இசை பரவாயில்லை.

சலீம் -வலிமையான கதைக்களம்

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-29 11:27:01
3 (3/1)
Close (X)

சலீம் (Salim) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே