கிறுகல் காரணி... தளத்தில் தோழி சில்வியா கடந்த வாரம்...
கிறுகல் காரணி...
தளத்தில் தோழி சில்வியா கடந்த வாரம் "சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்" என்ற எண்ணம் பதிவு செய்திருந்தார். நானும் படித்தேன், பகிர்ந்தேன். ஆனால் அடுத்த நாள் அந்த பெயர்கள் என் மனதில் இருந்து மறைவது போல் தோன்றியது. அது மறக்காமல் இருக்க ஒரே வழி, பிடித்ததாய் மாற்ற நினைக்க, பிறந்ததுதான் இந்த காதல்(காமெடி) கிறுக்கல்.
இனி எனக்கு...
அடுத்த ஜென்மத்திலும் பெயர்கள் மறக்காது, ஏனெனில்
அப்போதும் காதலித்துக்கொண்டுதானே இருப்பேன் நான்.
தேநீர் கடை - ப்ரியன்
தினம் குளம்பி நான் குடிக்க
தேநீர் கடை வரவே
பனிக்குழைவாய் எம்மனசு
உன்னை
பார்த்ததுவும் உருகுதடி...
காஞ்சமெதுவன் வறக்கைவர
காத்திருந்தா
கண்ணனுக்கு கோளினியாய்
நீயும்
கிடைத்தாய்தானடி...
முளரிப்பால் (உன்)நிறத்தைக்காட்டி
எச்சிலூறும்
முறுக்கினியாய் எனக்கு
நீயும்
தோன்றுவதேனடி...
புரியடை மாவாய் உன்னழகால்
என் மனம் பிசைய
பார்வையால் மட்டுமேனும்
என்னுள்
பாற்கன்னல் ஊற்றிப்போடி...
பழக்கூட்டாய் உன் நினைவு
பாவி மனதில்தான் திளைக்க
உன் குறுகுறு பார்வையாலே
புரியா
குழைமாவாய் மாறினேன்டி...
ஈரட்டி தோய்ச்சி முறுகி
கடினி குளிர்குடிப்பு முடிக்க
கொடுப்பாயா சம்மதம்
உன்னை
பெண்பார்க்க நானும் வந்தா...
பிடித்திருந்தா சொல்லிவிடு
போடுகிறேன் ஊருக்கே
செழும்பம் காய்சோறோடு
இட்டிலி முறுவல் சாதம்
மென்குழம்பு துவையலுமாய்
திருமணத்தில்
உன் கழுத்தில் தாலியும் தந்து...