எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவிங்களுக்கு எங்க இருந்ததுதான் வார்த்தைகள் கிடைக்கும் எனத் தெரியலை.....

இவிங்களுக்கு எங்க இருந்ததுதான் வார்த்தைகள் கிடைக்கும் எனத் தெரியலை.. " பட்டுபோன்ற சருமத்தின் சிகப்பழகு..... டேய்.டேய்... எப்படிடா..? சிகப்பு ன்னா என்னங்கடா..? நிறத்தை குறிப்பது சிவப்புடா... அதை மாத்துங்கடா மொதல்ல.. அப்பறம் அது என்ன சிவப்பழகு ..? சிவப்பா அழகா இருக்காங்க.... ஆனா கருப்பா இருந்தாலும் களையா.... அது என்ன இருந்தாலும்.... அங்க ஏண்டா அழுத்தம்..? களையா இருக்கான்னு சொல்லு .. இல்லன்னா கருப்பா இருக்கான்னு சொல்லு....இந்த உலகத்தோட ஒரு பகுதி பூரா கருப்பாதான் இருக்காங்க... அங்க கொண்டு போய் வித்துப்பாருங்க... உங்க நாடகத்த .... நல்லா ...................... அடிப்பான். உங்களுக்கு இந்த நாட்லதாண்டா புன்னகை மன்னன்கள் எல்லாம் இருக்காயங்க..... இதுலயும் இன்னும் ஒரு படி மேல போய்... நீங்க இந்த சாதியா... நல்லா கலரா இருக்கீங்களே.... இது ஒரு கூட்டம்... கலரான்னா.. என்ன பச்சை நிறமாவா..? கொஞ்சமாவது மூளைய பயன்படுத்துங்கடா... இதுக்கு நாலு கருத்து வேற வரும்.. நீங்க கருப்பா இருக்கிங்கன்னு வருத்தமான்னு...? ஆமா... கருப்பு ஒரு நிறம் தானே .. அது ஒன்னும் ஊனம் இல்லையே.. அதை ஏன் மாத்தனும்.... வெள்ளைக்காரன் படத்துல வர்ற பேய் கூட வெள்ளையாத்தான் இருக்கு .. அதுனால உங்கள எல்லாம் பேய் ன்னு சொல்லிரலாமா ...? தின்கிற காய்கறிய முகத்துல அள்ளி பூசிகிட்டு இவிங்க படுத்துற பாடு..... தாங்க முடியலைடா சாமி..... யாரவது பச்சை மிளகாய் பசை அள்ளி பூசிக்கிட்டா அழகா ஆயிரலாம்ன்னு சொன்னா அதையும் செய்வீங்களாடா...?
என்னோட தமிழ் கூட்டம் கருப்பாத்தா இருக்கும்...கருப்பு என்பது என்னோட அடையாளம் .. என் சமூகத்தின் அடையாளம் .. திருந்த பாருங்கடா .... நிறவெறி மோகத்தை விடுத்து..

பதிவு : கட்டாரி
நாள் : 20-Sep-14, 10:35 am

மேலே