இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா! இலங்கையில் இனப்பிரச்சனையை...
இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா!
இலங்கையில் இனப்பிரச்சனையை குழப்புவது இந்தியா!
இலங்கையில் அதிகம் ஆக்கிரமிக்கும் நாடு இந்தியா!
இலங்கையில் 3 தூதரகங்கள் வைத்திருப்பது இந்தியா
இலங்கையில் அதிகம் முதலீடு செய்திருப்பது இந்தியா!
இலங்கையை அதிகம் சுரண்டும் நாடு இந்தியா!
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது இந்தியா!
இலங்கைப் படைகளுக்கு பயிற்சி கொடுப்பது இந்தியா!
இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல் வழங்குவது இந்தியா!
இலங்கை அரசு தமிழக மீனவர்களை கொல்ல அனுமதிப்பது இந்தியா!
இலங்கைத் தமிழர் போராட்டத்தை நசுக்குவது இந்தியா!
இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு துணை போவது இந்தியா!
இலங்கையில் 1971ல் வந்து ஜே.வி.பி யை அழித்தது இந்தியா!
இலங்கையில் 1987ல் அமைதிப்படையாக வந்து தமிழரை அழித்தது இந்தியா!
சீன உதவியுடன் மேற்கொண்ட கொழும்பு அபிவிருத்தியை பாதியில் நிறுத்தும்படி இந்தியா கட்டளையிடுகிறது. கொழும்பு துறைமுகம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலா? அல்லது இந்திய அரசின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது?
இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரே ஆக்கிரமிப்பு கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது தமிழக தமிழர்களுக்கு எழுச்சியை கொடுக்கும் என்ற காரணத்தைக் கூறி தொடர்ந்து இலங்கை தமிழர் போராட்டத்தை நசுக்கி வருகின்றனர்.
சிக்கிம், பூட்டான் போன்று இலங்கையையும் இந்தியாவின் ஒரு அடிமைப் பிரதேசமாக்க இந்தியா முயல்கிறது.
இலங்கையை இந்தியாவின் 30 வது மாநிலமாக்க இந்தியா மெல்ல மெல்ல முயற்சி செய்கிறது. அதற்கு இலங்கை ஆட்சியாளர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் உதவி வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வந்துள்ளார். அவர் 4 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். அதில் ஒன்றுகூட இலங்கை தமிழர்களுக்கு உதவும் ஒப்பந்தம் இல்லை.
26 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யும்படி கூட மோடி கேட்கவில்லை.
மன்னாருக்கு மோடி செல்கிறார். ஆனால் அங்கு தமிழ் மாணவியை இலங்கை ராணுவம் கற்பழித்துள்ளதைக்கூட அவரால் கண்டிக்க முடியவில்லை.
தமிழர்களை அழித்த முன்னாள் ஜனாதிபதியைக்கூட மோடி சந்திக்கிறார். ஆனால் காணாமல் போனவர்களின் பெற்றார்களை சந்திக்க மோடி மறுக்கிறார்.
சம்பூரில் இந்திய அனல் மின் நிலையத்திற்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்றும் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்கள் குறித்துகூட மோடிக்கு கவலை இல்லை.
இவர்களை போன்றவர்கள் தலைவர்களாக இருக்கும்வரை தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லை.
Balan