மாலையில் தனிமையில் அவளும் நானும் காதலர்களுக்கே உரித்தான உணர்வு...
மாலையில் தனிமையில்
அவளும் நானும்
காதலர்களுக்கே உரித்தான
உணர்வு பேச்சில்
உலகை மறந்து கொண்டு இருந்தோம் ..
திடீர் என என் காதலி கேட்டாள்
" நான் அழகா இருக்கேனா" என்று
"உண்மையை சொல்" என்று ...
நானும் இல்லை
நீ அதிக அழகு இல்லை
பரவலாம இருக்க என்றேன் ...
சிறிது அமைதியா இருந்த அவள்
புன்னகை செய்து சொன்னால்
நீங்கள் உண்மையா இருக்கிங்கனு ...
இதை கேட்டு நான்
அமைதியாக இருந்தேன்
என்ன ஆச்சு என்றாள்...
இல்லை நான் சொன்னது பொய் என்றேன் ...
கட்டியணைத்து சொன்னாள்
இப்போ ரெம்ப உண்மையா இருகிங்க ...