எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜ,ஷ,ஸ எழுத்துகளை உள்ளீடு செய்யப்பட்ட சொற்களை வடமொழிச் சொற்கள்...

ஜ,ஷ,ஸ எழுத்துகளை உள்ளீடு செய்யப்பட்ட சொற்களை வடமொழிச் சொற்கள் என பலரும் தவறாக கணித்து இருப்போம். தமிழ்ச் சொற்கள் போல இருக்கும் சில வடமொழிச் சொற்களும் உள்ளன

மத்திய - இதன் தூய தமிழ்ச்சொல் நடு, நடுவண்

பிற எ-கா

வடச்சொல் - தூய தமிழ்ச் சொல்
-------------------------------------------
மதியம்- நண்பகல்,உச்சி
அந்தி -மாலை
தீர்க்கம் - உறுதியான,முழுமையான, ஆழமான
பரம்பரை- தலைமுறை
யுத்தம்- போர்
நியதி -முறைமை, நெறி
சமீபம் - அண்மை
ருசி -சுவை
வாகனம் -ஊர்தி
சாபம் -கெடுமொழி
ஆபத்து- துன்பம்
உபயோகம்- பயன்பாடு

இதுப்போல நிறைய வடமொழிச்சொற்கள் நம் தமிழ்மொழியில் கலந்துள்ளன.

அழகுக்காக சந்தம் கூடி வருவதற்காக கவிதைகளில் வடமொழிச்சொற்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடான ஒன்றுதான். எனினும் வடமொழிச்சொற்களை அதிகளவில் பயன்படுத்தி நமது தமிழின் தூய்மை சொற்கள் வழக்கிலிருந்து மறையவும் அழியவும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழ கூடாது அல்லவா. ?

இதனை குறித்தும், வழக்கொழிந்த பல சொற்களை அறியவும் முழமையான ஆய்வுக்கட்டுரை எழுத விருப்பம். தளத்திலிருக்கும் தோழர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.


நன்றி!

-வியன்

பதிவு : வியன்
நாள் : 30-Apr-15, 3:13 pm

மேலே