எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை நடுக்கடலில் தத்தளித்தேன் காப்பாற்ற கைகள் தேடினேன் மூழ்கும்...

வாழ்க்கை


நடுக்கடலில் தத்தளித்தேன்
காப்பாற்ற கைகள் தேடினேன்
மூழ்கும் நேரம்
ஒருமுறை முயன்று பார்ப்போமென்று
முயற்சி செய்தேன்
நீந்த கற்றுக் கொண்டேன்
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கரைகளை கண்டுவிட்டேன்
விரைவில் கரையை அடைந்து விடுவேன்
கடலில் தள்ளிய கைகளுக்கும்
காப்பாற்ற தவறிய கைகளுக்கும் நன்றி
வாழ்க்கையை எனக்கு வாழ கற்று தந்தமைக்கு...!

இருமதி பந்தலராஜா

நாள் : 24-Mar-18, 11:24 pm

மேலே