எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலர்கள் வெறுமனே மலர்கின்றன...
செடிகள் தான் பூக்கின்றது...
மலர்களைத்தானே ரசிக்கிறோமேயன்றி
செடிகளை யாரும் ரசிப்பது கிடையாது !!!

ரசிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம்
செடிகளுக்குக் கிடையாது
இருந்தாலும் பூக்கின்றவே !!!

உயிர்கொடுத்த செடிக்கே
உரமாகிவிடுவோம் என்பதனாலோ
காலையில் மலர்வன மாலையில்
உதிர்கின்றன !!!

எதிர்பார்ப்பே இல்லாத சாமிக்கு
எதிர்கலமே அறியாத மலர்களால்
எதற்காக அபிசேகம்??
தற்குறிகளை அவர்
தண்டிக்க மாட்டார் -
இருந்தாலும் கற்பனை மிகுதியால்
கண்ணீர் வடிக்கிறோம் !!!

- M.S.M. Mafaz  

May be an image of flower, tree and outdoors

மேலும்

எழுதவும் மனமில்லை
எதிர்பார்ப்புகள் ஏறாலம் !
புரியாத பொழுதுகள் எனைப்பார்த்து 

புன்னக்கின்றது
இன்றாவது எனை நீ 
புரிந்து கொள்வாயா என்று !!!

மேலும்

வாழ்க்கை


நடுக்கடலில் தத்தளித்தேன்
காப்பாற்ற கைகள் தேடினேன்
மூழ்கும் நேரம்
ஒருமுறை முயன்று பார்ப்போமென்று
முயற்சி செய்தேன்
நீந்த கற்றுக் கொண்டேன்
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கரைகளை கண்டுவிட்டேன்
விரைவில் கரையை அடைந்து விடுவேன்
கடலில் தள்ளிய கைகளுக்கும்
காப்பாற்ற தவறிய கைகளுக்கும் நன்றி
வாழ்க்கையை எனக்கு வாழ கற்று தந்தமைக்கு...!

இருமதி பந்தலராஜா

மேலும்

  
நீங்கள் உருவாக்கிய மனுஷி..!


தண்டவாளத்தின் கிராசிங்கில்

இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி

உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!

 குடும்பத்திலிருந்து உங்களால்
விரட்டப்பட்டவள்...!
நீங்கள் பயணிக்கும் தொடரியில்

உங்களிடம் பிச்சைக் கேட்க

உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!


நீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக

முகம் சுளிப்பீர்களென அறிந்தும்

அந்த இரும்பு தண்டவாளத்தை

கடப்பது போல

உங்கள் முக சுளிப்புகளை கடந்து

உங்களிடம் பிச்சையீட்ட

அவள் உங்களுக்காக காத்துக்
கிடக்கிறாள்...!

அவள் எப்போது வேண்டுமானாலும்

எதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...!

அது ஒரு தற்செயல் ..!

ஆனால் நீங்களிடும் பிச்சையீட்டி

வாழ்வது தான் அவள் விதியாயிற்றே..!

அவ்விதி வழியே...

அவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...!


அவளை கூர்ந்து நோக்குங்கள்..!

அவள் உங்களுடைய சகோதரியாக
இருக்கக்கூடும்...!

அவளை கூர்ந்து நோக்குங்கள்...!

அவள் நீங்கள் ஈன்றெடுத்த

உங்களின் பிள்ளையாக இருக்கக்கூடும்...!

மேலும்

என்னிடம்

உண்மையாக இல்லாதவர்களிடம்
நான்
பொய்யாகக்கூட 
பழகுவதில்லை.

மேலும்

என்னை 

விட்டுச்செல்கிறேன் என 
என் உயிர் கூறினாலும்
எனக்கு கவலையில்லை
என்னை 
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்வதால்..

மேலும்

Life is like a OTP 

you must use 
with in that validity
Otherwise it will be 
Expired..


மேலும்

உன் தொடக்கம் 

ஒரு நல்ல முடிவை 
தரலாம்- ஆனால்
உன் முடிவு ஒருபோதும் 
நல்ல தொடக்கத்தை தராது...

மேலும்

கண் அற்றநிலையே வாழ்க்கை
தெரியாதா நிகழ்வே நடக்கும்

மேலும்

மேலும்...

மேலே