எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறப்பவர் எவருக்கும் இறப்பு என்பது உறுதி . இது...

பிறப்பவர் எவருக்கும் இறப்பு என்பது உறுதி . இது இயற்கையின் நியதி . ஆனால் பிறப்பை , கருத்தரித்த பத்து மாதங்களில் என்று கணக்கிடலாம் .சில வேளைகளில் சூழ்நிலை மற்றும் தாயின் உடல்நிலை காரணமாகவும் , அல்லது மருத்துவர் ஆலோசனைப்படியும் ( ? ) சற்று முன்னதாகவே பிறப்பும் நிகழ்கிறது . அது சரியா தவறா என்று விவாத்திக்க விரும்பவில்லை ... மருத்துவ உலகில் அது விதிக்கப்படாத சட்டம் . நாள், நட்ச்சத்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எடுக்கின்ற முடிவு . சோதிடர்கள் கணிப்பதை சோதித்துப் பார்க்க நினைப்பவர்கள் செய்கின்ற சோதனையின் எதிரொலி . 



அதேவேளையில் ஒருவருக்கு இறப்பு அல்லது மரணம் நிகழ்வது திடீரென்றும் இருக்கும் , நோய்வாய்ப்பட்டு மிகவும் சிரமத்துடன் முடிகின்ற முடிவாகவும் இருக்கும் . இந்த இரண்டும் நான் கண்டது பல இருக்கிறது . மேலும் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது ( அல்லது ) சமூகத்தில் ஒரு மூடநம்பிக்கை என்றும் கூறலாம் ...அதாவது , நல்லவர்களுக்கு இறுதிக்கட்டம் வரை , மரணம் நிகழும் நேரம்வரை எந்தவித பாதிப்புமின்றி , சிரமப்படாமல் உயிர் பிரியும் என்று . ஆனால் கெட்டவர்கள் தமது மரணத்தை இறுதிவரை உடலாலும் மனதாலும் மிகமிக சிரமப்பட்டு தழுவவர் என்று . 


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இதற்காக பொதுவான பலரின் முடிவுகளை  எடுத்து வைத்து வாதிட முடியும் . எனக்கு அதில் நாட்டமும் இல்லை, அவசியமும் இல்லை. மூடநம்பிக்கையைப் பின்பற்றும் பலரும் இதனை ஏற்க மாட்டார்கள் என்றும் எனக்குத் தெரியும் . " விதி " என்று கூறி  , அவர்களே சில விதிகளை வகுத்து அதன் வழியே செல்பவர்கள் அவர்கள் .  விருப்பங்களும் விதிமுறைகளும் மாறுபடலாம் . எண்ணங்களும் வேறுபடலாம் . 


இதை இப்போது இங்கே பதிவிட காரணம் , சமீபத்தில் நடந்த எனக்கு மிகவும் அறிந்தவர்கள் , வேண்டியவர்களின் சிலரின் இறப்பு தான் . அதனால் நான் உணர்ந்த பேரிழப்புதான் . ஆகவே என்னைப் பொறுத்தவரை , ஒருவரின் வாழ்வின் முடிவு அமைவது , அல்லது மரணம் அடைவது ,  அவர் நல்லவரா , கெட்டவரா , வயதில் மூத்தவரா அல்லது இளையவரா என்பதில் அல்ல . பலவித காரணங்கள் இருக்கும். 


ஆனால் நாம் எதையும் எந்நேரத்திலும் எதிர்வரும் நிகழ்வுகளை , இயற்கையின் செயல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் பக்குவமும் மனநிலையும் வேண்டும் என்பது . எதையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது . 



பழனி குமார் 
 19 .10 2019
            




        

நாள் : 19-Oct-19, 7:09 am

மேலே