உழைப்பே உயர்வு ௐயாத அலைகடல் ௐடுகின்ற மேகங்கள் ஒவ்வொன்றும்...
உழைப்பே உயர்வு
ௐயாத அலைகடல்
ௐடுகின்ற மேகங்கள்
ஒவ்வொன்றும் உணர்த்திடுமே
ஒய்வில்லா உழைப்பதனை
நிலவிலும் கால் பதித்தான்
நீரினூள் ஆழ் அறிந்தான்
நிலத்திலே உன் தடம்
நீங்காது பதித்திட உழைத்திடு!
கனவுக்கு உயிர் கொடு
கடிகாரத்திற்கு விடை கொடு
கடினமாக நீ உழைத்திடு
கல்வெட்டாய் பெயரை பதித்திடு!
உன்னையே நீ அறிந்திடு
உழைப்பையே உன் துணையாக்கிடு
உலகமே உன்னை போற்றிட
உழைப்பால் நீ உயர்ந்திடு!
பா.விஜய்