எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

   உழைப்பே உயர்வு   


 ௐயாத                அலைகடல் 
 ௐடுகின்ற                   மேகங்கள் 
 ஒவ்வொன்றும்                 உணர்த்திடுமே 
 ஒய்வில்லா             உழைப்பதனை  
     
 நிலவிலும்         கால்          பதித்தான்      
 நீரினூள்     ஆழ் அறிந்தான் 
 நிலத்திலே    உன்             தடம் 
 நீங்காது       பதித்திட      உழைத்திடு!   

 கனவுக்கு         உயிர்         கொடு 
 கடிகாரத்திற்கு விடை        கொடு 
 கடினமாக         நீ உழைத்திடு 
 கல்வெட்டாய்   பெயரை     பதித்திடு!   

 உன்னையே   நீ            அறிந்திடு 
 உழைப்பையே உன்              துணையாக்கிடு 
 உலகமே      உன்னை     போற்றிட 
 உழைப்பால்    நீ        உயர்ந்திடு!      

   பா.விஜய்      

மேலும்

ஏளனம் காட்டும் 

 கேவலமாய் பேசும் 
 லாயக்கி இல்லையென கண்டபடி சொல்லும்   
முயற்சி வீண் எனச் சொல்லி, 
 பொறுமை வெறுமை என பொத்தி நகைக்கும், 

 ஊக்குவிக்காது ஊசி குத்தி நரம்பேத்தும் .   
 கண்ணீர் முட்ட வைக்கும் 
 தலையில் குட்டி சீர் குலைக்கும்   

 வலி பொறு 
 தடை அறு 
 பணியாமல் முயல் 
 துணிந்து எழு     
 முட்டி மோதி உஷ்னம் ஏற்றி 
 இன்னும் இன்னும் முயன்று முன்னேறு 
 ஜெயித்தே ஆக வேண்டும் 
 அதுவரை விடாதே 

சிரிக்கும் உலகம் கை தட்டும் 
 உன் சொல்லை உதாசீன படுத்திய மனிதர்கள் 
வேதம் என்பர்      

மேலும்

நன்றி அருள் ஜீவா அவர்களே 28-Oct-2019 11:09 am
நல்ல பதிவு. விடாமுயற்சிக்கான பதிவு. 25-Oct-2019 1:48 pm

ஏளனம் செய்து பார்த்தாய் 

 ஏசி வீசி பார்த்தாய் 
 முதுகுத் தண்டின் மையப் பகுதியில் 
 மூர்க்கமாய் குத்திப் பார்த்தாய்   

 முகம் முறைத்து அகம் கடித்தாய், 
 அணை இழுத்து எனை தடுத்தாய்,   

 நண்பன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன்பிறந்தவன் என்றாய் 
 நம்பினேன் 
 நல்லவன் என்றாய் 
 நம்பினேன் 
ஒப்பற்ற மனிதன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன் வருவேன் 
 கடன் தருவேன் என்றாய் 
 அதையும் அதையும் அடித்து நம்பினேன்   

 அடி வாங்கினாலும் மறுநொடி எழுவேன் 
 துரோகம் புரிய யுகம் தேவை   
 இருந்தும் புரிந்தேன் 
 இரும்பாய் எழுந்தேன்   

 நான் வீழ்வேன் என நினைத்தாயோ???         

மேலும்



செதுக்கப்பட்ட கற்சிலையின் சில்லுகளாய் 

 நான் சிதறிப்போவதால்தான் 

நீ உருவம் பெறுகிறாய்...

 நான்இங்கு  காலடியில்

 நீயோ   கருவறையில்   

மேலும்


மேலே