ஏளனம் காட்டும் கேவலமாய் பேசும் லாயக்கி இல்லையென கண்டபடி...
ஏளனம் காட்டும்
கேவலமாய் பேசும்
லாயக்கி இல்லையென கண்டபடி சொல்லும்
முயற்சி வீண் எனச் சொல்லி,
பொறுமை வெறுமை என பொத்தி நகைக்கும்,
ஊக்குவிக்காது ஊசி குத்தி நரம்பேத்தும் .
கண்ணீர் முட்ட வைக்கும்
தலையில் குட்டி சீர் குலைக்கும்
வலி பொறு
தடை அறு
பணியாமல் முயல்
துணிந்து எழு
முட்டி மோதி உஷ்னம் ஏற்றி
இன்னும் இன்னும் முயன்று முன்னேறு
ஜெயித்தே ஆக வேண்டும்
அதுவரை விடாதே
சிரிக்கும் உலகம் கை தட்டும்
உன் சொல்லை உதாசீன படுத்திய மனிதர்கள்
வேதம் என்பர்