புரூனே ரூபன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : புரூனே ரூபன் |
இடம் | : புரூனே |
பிறந்த தேதி | : 29-Oct-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 20 |
தமிழ் மீதும் எழுத்து மீதும் நீளும் காதல் எனக்கு...
கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்
தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்
விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது
கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல
பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்
தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?
கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்
தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்
விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது
கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல
பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்
தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?
ஏளனம் காட்டும்
எட்டும் கனி அல்லவே
நீ எந்தன்
பூவிழி தேன்மொழியோ
சுட்டும் வான் சுடரும்
நின் கண்கள்
பேசத் துணிவில்லையோ
பட்டும் பால் நிறமும்
ஒன்றாகக் கூடிய தேகமோ
கட்டும் கண்ணிரண்டும்
கொட்டாமல் பார்த்திட தோன்றிடுமோ
பேரலை நூறலையாய்
நெஞ்சத்துள் ஆடி அடிக்குதடி
கானலை பார்த்திடினும்
கங்கையாய் ஆவி துடிக்குதடி
கன்னத்தில் ஒரு மச்சம்
ஓரத்தில் ஓயாமல் சிரிக்குதடி
கிண்ணத்தில் நீர் குடித்தேன்
அம்மம்மா வெந்நீராய் எரிக்குதடி
கூந்தலின் நிறமறிய
வான்முகில் கூடுதடி
வாசங்கள் தான் பிடிக்க
பூக்களும் தேடுதடி
கருமணி வெண்திரையில்
ஓவியம் காட்டிடுமோ
ஒருமணி ஒருமுறையில்
காவியம் மீட்டிடுமோ
இறைவனின் கொடையித
நெருங்கும் கை விரலாக
உருகித் தேடும்
காலத்தின் கட்டாய காதல்,
உறங்கும் உள்ளுணர்வை
திருகி எழுப்புவிட,
உறையும் பொன்னிதயம்
ஊர்ந்து நகரும்
எடையேறி
எடை குறையும்.
தடுக்க முடியா
காட்டாறாய்
கரை தேடி
முறை துறந்து
அதிவேகமாக
அலையோடு நுரை தள்ளி
கிளை முறித்து
பலமோடு பாயும் உட்குருதி!
நரம்புகள் மூழ்கி
முகம் தள்ள எந்திரிப்பது
தொடர்கதையாகும்
ஹார்மோன் சத்தங்கள் சந்தங்களாகும்,
வீதி விளக்குகள்
நிலாக்களாகத் தெரியும்
கருமேகம் கலராகும்
எருமை பசுவாய்த் தெரியும்
சிறு பொழுதும் விழுதாகும்
விழுந்தும் வேராகும்
கால் நடைகளை கொஞ்சுவாய்
கை நகம் அதிகம் கடிப்பாய்
தோள் தொடும் நட்புடன்
கதை,
முலம் போட்டு பேசுவாய்
கனவில்
ஏளனம் செய்து பார்த்தாய்
தாடி குறையும்,
மீசை கொஞ்சம்
கொஞ்சி கொஞ்சி
உதடு மீது மேடை ஏறும்...
மீசை கொரஞ்சி,
அப்பப்போ முடியெல்லாம்
அப்பப்பா ஆட்டம் போடும்...
ஆற்றங்கரை ஓரத்தில்
கூழாங்கல் ஒவ்வொன்றும்
புல்லாங்குழல் பேசுமே
அது புரியும்!
எனக்கு,
மாத்து உடை மாத்துவதாய்
நீல வானம் வெட்கப்பட்டு
சிந்துவதாய் சிவப்பாகும்
அது புரியும்!
வீதி வெறிச்சோடும்
நடமாட்டம் நிற்கும்
குடை உடல் விரிக்கும்
சாலை நீச்சலுடை போட்டுக் கொள்ளும்
பகல் இரவாகும்
இரவெனில் இருட்டை இன்னும் இரவல் வாங்கும்
எச்சத்தம் ஆயினும்
நிசப்தம் ஆக்கிடும்
மழை!