முதிர்கன்னி

கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்

தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்

விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது

கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல

பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்

தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?

எழுதியவர் : புரூனே ரூபன் (30-Dec-19, 12:07 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : muthirkanni
பார்வை : 284

மேலே