மழை

வீதி வெறிச்சோடும்
நடமாட்டம் நிற்கும்
குடை உடல் விரிக்கும்
சாலை நீச்சலுடை போட்டுக் கொள்ளும்
பகல் இரவாகும்
இரவெனில் இருட்டை இன்னும் இரவல் வாங்கும்
எச்சத்தம் ஆயினும்
நிசப்தம் ஆக்கிடும்
மழை!

எழுதியவர் : (18-Oct-19, 12:49 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : mazhai
பார்வை : 148

மேலே