எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏளனம் செய்து பார்த்தாய் ஏசி வீசி பார்த்தாய் முதுகுத்...

ஏளனம் செய்து பார்த்தாய் 

 ஏசி வீசி பார்த்தாய் 
 முதுகுத் தண்டின் மையப் பகுதியில் 
 மூர்க்கமாய் குத்திப் பார்த்தாய்   

 முகம் முறைத்து அகம் கடித்தாய், 
 அணை இழுத்து எனை தடுத்தாய்,   

 நண்பன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன்பிறந்தவன் என்றாய் 
 நம்பினேன் 
 நல்லவன் என்றாய் 
 நம்பினேன் 
ஒப்பற்ற மனிதன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன் வருவேன் 
 கடன் தருவேன் என்றாய் 
 அதையும் அதையும் அடித்து நம்பினேன்   

 அடி வாங்கினாலும் மறுநொடி எழுவேன் 
 துரோகம் புரிய யுகம் தேவை   
 இருந்தும் புரிந்தேன் 
 இரும்பாய் எழுந்தேன்   

 நான் வீழ்வேன் என நினைத்தாயோ???         

நாள் : 18-Oct-19, 1:20 pm

மேலே