நாத்திகம்
சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.
இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது.
(இன்டர்நெட் வெளியிட்டுள்ள செய்தி.)
இது சரியான தீர்ப்பா? உங்கள் கருத்து என்ன ?