பொங்கல் கவிதை போட்டி
எழுத்து தள உறுப்பினர் நண்பர் நிலாசூரியன் அவர்கள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சில தினங்களுக்கு "பொங்கல் திருவிழா கவிதை போட்டி" நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் சிறந்த படைப்பை நமது எழுத்து தளத்தின் மூத்த படைப்பாளர்களை நடுவர்களாக கொண்டு, அவர்கள் தேர்வு செய்யும் படைப்பிற்கு பரிசு வழங்க இருக்கிறார். இந்த முயற்ச்சியை எழுத்து தளம் ஆதரிப்பதால் இந்த அறிவிப்பை எழுத்து வெளியிடுகிறது.
குறிப்பு :
எனினும், இந்த போட்டியில், பரிசு மற்றும் தேர்வு முறையில் எழுத்து குழுமம் நேரடியாக தலையிடாது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.