சென்னையின் எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்த சம்பவத்தை பற்றி உங்கள் கருத்து.
சென்னையின் "எக்ஸ்பிரஸ் அவின்யு"வளாகத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவரை காப்பாற்ற ஊழியர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.பின் அவர் உடலில் உயிர் இருப்பதாய் அறிந்த நிலையில் பொது மக்கள்,அவரை மருத்துவமனைக்கு எடுத்துசெல்ல முயன்றபோது ஊழியர்கள் அவர்களையும் தடுத்துள்ளனர்.இதனால்,விசாரணைக்கு வந்த காவல் அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .அதில் ஒரு பெண் மட்டும் தைரியத்துடன் காவலதிகாரியிடம் பேசமுயன்றார்.அப்போது அந்த பெண்ணிர்க்கும் காவலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.