நிழல் இளவரசி
(Tamil Nool / Book Vimarsanam)
நிழல் இளவரசி விமர்சனம். Tamil Books Review
மதுரம் சுந்தரேசன் அவர்கள் எழுதிய நூல், நிழல் இளவரசி.
பதினேழாம் நூற்றாண்டில் சக்ரவர்த்தி ஷாஜஹானின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போரட்டம் பற்றிய நூல் தான், நிழல் இளவரசி.
சக்ரவர்த்தியின் புதல்விகள் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர். அந்தப்புபுரத்தின் ஆட்சி, அவர்கள் தந்தையின் நேசம், அரியணை வாரிசாக வர, இருவரும் வெவ்வேறு சகோதரர்களை ஆதரிக்கின்றனர். ஆனால், அதில் ஒருவர் தான் வெற்றி காண முடியும்.
அந்த காலத்திய பெண்களின் சிக்கலான வாழ்க்கை பற்றியும், திறமைகளைப் பற்றியும், உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தாஜ்மஹால் உருவெடுத்த விவரங்களையும் சுந்தரேசன் அவர்கள் இந்நூலின் மூலம் விவரிக்கிறார்.