ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை

(Tamil Nool / Book Vimarsanam)

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை விமர்சனம். Tamil Books Review
ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை கவிதை நூல் – ஆழி.வீரமணி

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை-கவிதை தொகுப்பு
ஆசிரியர் : ஆழி. வீரமணி
வெளியீடு : செம்மண் பதிப்பகம்
விலை : ₹ 60

ஜாதியத்தை ஒழிக்க, இவரின் வரிகள் ஓர் தூண்டுகோலாக இருக்கும். ஜாதிய ரீதியாக புறக்கணிப்பு, தீண்டாமை போன்ற மக்கள் மத்தியில் இருக்கும் இருளை இவரின் எழுத்து வெளிச்சம் போக்குகிறது!

மாமுண்டியின் வரைப்படங்கள் அருமை. அட்டையின் நிறமும், வடிவமைப்பு நன்று !

சேரிமனிதர்கள்
புழங்கமுடியாத
ஊர்க்குளத்தில்
செத்தமாட்டுக்குடலை
மிதக்கச்செய்யும்
காக்கைகள்
நிச்சயம்
என் பித்ருக்களே !

எதிரே வரும்போதெல்லாம்
ஒதுங்கிப்போகச்சொன்ன
ஊர் வெட்டியானிடம்
செமத்த அடி வாங்குகிறார்
கட்டையில் எரியும்
பெரிய குடும்பத்து ஆண்டை

போன்ற கவிதைகள் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம் !

தவறவிட்ட மூன்றாவது ரயில் என்ற கவிதையில் ஏதேனும் திவ்யாவின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும், இவரது ஒவ்வொரு கவிதைகளும் தர்மபுரி இளவரசனை நம் கண் கொண்டு செல்கிறது !

மேலாதிக்க சாதிகளுக்கு அடங்க மறுத்து, அஞ்சாமல் அத்துமீறி,
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து திமிறி எழுந்து, திருப்பி அடிக்கும் சொல்லாய் இவரின் ஒவ்வொரு எழுத்துக்களும் இருக்கின்றன !

தாயின் தாய்ப்பாலை (அம்மாச்சி) கூட பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை !

சேர்த்தவர் : கோகதினேஷ்
நாள் : 13-Nov-15, 9:27 pm

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே