யவன ராணி
(Tamil Nool / Book Vimarsanam)
யவன ராணி விமர்சனம். Tamil Books Review
யவன ராணி ; சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்டு 1960 களில் குமுதம் வார இதழில் வெளிவந்த வரலாற்றுத் தொடர் . வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது .
சரி! இனி கதைக்குள் போவோமா?
சோழர் படையின் உப தலைவன் தான் நமது கதாநாயகன் . பெயர் இளஞ்செழியன். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன். தனது அக்கா மகள் பூவழகி மேல் அளவுகடந்த காதல் கொண்பிருப்பவன். இயல்பிலேயே பெண்களுக்கு இருக்கும் சந்தேக நோய் பூவழகியையும் ஆட்கொள்கிறது. இளஞ்செழியன் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இழந்செழியன் மனம் நொந்திருக்கும் வேளையில் அவன் வாழ்வில் வருகிறாள் யவன ராணி.
அன்றைய தமிழகத்தில் வெளி தேசத்தவர்களை யவனர்கள் என்று அழைப்பது வழமை. அந்தவகையில் கிரேக்க தேசத்தில் இருந்து தமிழ்நாட்டில் முடி சூடிக் கொள்ள வந்த இளவரசி யவன ராணி என்று அழைக்கப்பட்டாள்.
பூவழிகியால் காயப்பட்டிருந்த இளஞ்செழியனின் நெஞ்சத்தை யவன ராணியின் காதல் மயிலிறகால் வருடிற்று. அவள் அழகில் மயங்கிய இளஞ்செழியனும் தன்னை மறந்தான். தன இதய ராணி பூவழகியையும் மறந்தான்.ஆண்களுக்கு எப்படியோ தெரியவில்லை. இளஞ்செழியனின் இந்த இரட்டை நிலை எந்தப் பெண்ணுக்குமே ரசிக்கக்கூடியதாய் இருக்காது என்பது என் அபிப்பிராயம்.
யவன ராணி இழஞ்செழியன் மீஎது கொண்ட காதலால் தன தாய் நாட்டுக்கு விரோதியாகிறாள். ஆனால் நம் நாட்டுக்கு நன்றிக்குரியவளாகிறாள்.
அவள் செய்த துரோகம் என்ன? அதனால் நமக்கு விளைந்த நன்மை என்ன? அதற்கு அவளுக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை நீங்கள் இத் தொடர் கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
(கல்லணையை கட்டிய நம் கரிகாலன் எப்படி சதிகாரர்களிடமிருந்து சோழ நாட்டை மீண்டும் அடைந்தான் என்பதையும்; அன்றைய நாட்களில் தமிழர்கள் கடல் வாணிபத்தில் எத்தனை தூரம் சிறந்து விளங்கினார்கள் என்பதையும்; மேல் நாட்டவர்களும் தமிழர்களின் கீழ் பணி புரிந்துள்ளார்கள் என்பதையும் போன்ற பல விடயங்களை இத் தொடர் நமக்கு அறியத் தருகின்றது.)