கட்டவிழ்ந்த தமிழ் மொழி Tamil Language Unshackled

(Tamil Nool / Book Vimarsanam)

கட்டவிழ்ந்த தமிழ் மொழி Tamil Language Unshackled

கட்டவிழ்ந்த தமிழ் மொழி Tamil Language Unshackled விமர்சனம். Tamil Books Review
நூலின் பெயர்: கட்டவிழ்ந்த தமிழ் மொழி (Tamil Language Unshackled).
நூலின் பக்கங்கள் 169.
விலை 200 ரூபாய். (Indian Rupees 200).
Published by Dr Robert B Grubh, 2nd Main Road, Christopher Nagar Extn., Nagercoil 629003, Tamil Nadu, India.
Tel. 04652 232430; Land line: 9843934399. Email: rbgrubh@live.com

வானுயரும் தமிழ்மொழியின் தொடர்வளர்ச்சிக்கு இடையூறாயிருக்கும் பல கட்டுகளை உங்கள் அறிவுக்கண்கள்முன் கொண்டுவருகிறது இந்த நூல். எத்தகைய கட்டுகள் இவை? இவற்றை அவிழ்த்தெறிய முடியுமா? ஆழ்ந்த கருத்துகளை நகைச்சுவையுடன் விளக்கும் இந்நூல், உங்கள் அறிவுணர்வுக்கு நல்விருந்தளிக்கும்.

இந்த நூலைக்குறித்து அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு பொன்னீலன் இவ்வாறு கூறுகிறார், “பறவைகளையும் சுற்றுச்சூழலையும் பேணும் ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஓரறிஞர், தாய்மொழியின் வளர்ச்சியில் இவ்வளவு அக்கறை காட்டி, இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது, தமிழுக்குக்கிடைத்த பேறு. அனைவருக்கும் புரியும்படி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள ஆழமான இந்நூலில் ஆசிரியர் தந்திருக்கும் எல்லா கருத்துகளும் அறிஞர், ஆட்சியாளர் மற்றும் மக்கள் மட்டத்தில் விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கப்பட வேண்டியவை. இந்த விவாதங்களின் முடிவு, தமிழ்மொழியை நிச்சயமாக கட்டவிழ்த்து பறக்கச்செய்யும்.”

ஆனந்தவிகடனின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர் திரு எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின் மதிப்புரை இவ்வாறு: “தமிழுடன் பெருமளவு தொடர்புள்ள மொழி வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் இந்த நூல் எட்டவேண்டும் என்பது எனது பேரவா.”

சேர்த்தவர் : Robert Grubh
நாள் : 18-Oct-17, 4:00 pm

கட்டவிழ்ந்த தமிழ் மொழி Tamil Language Unshackled தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே