காலத்தை வென்ற கம்பன்

(Tamil Nool / Book Vimarsanam)

காலத்தை வென்ற கம்பன்

காலத்தை வென்ற கம்பன் விமர்சனம். Tamil Books Review
பேராசிரியர் முனைவர் நா. பழனிவேலு அவர்கள் வால்மீகி ராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து இவர் தந்துள்ள நூல் ஒப்பிலக்கிய ஆய்வு உலகிற்கு ஓர் ஒப்பற்ற பங்களிப்பாகும். இவரது நூல் கம்பனை பல்வேறு கோணங்களில் கண்டுணர்த்துகின்றன. வணிக மையமாகவும், பொறியியல் மையமாகவும் மாறி வருகின்ற இன்றைய வாழ்வியலுக்குக் 'கம்பனில் வாழ்வியல் அறம்' என்னும் கட்டுரை வழிகாட்டும். இன்றைய காலத் தேவைக்கு ஏற்ற வகையிலேயே இவர்தம் பிற கட்டுரைகளும் அமைகின்றன. அரசியல் சிந்தனைகள், நதிநீர் பாதுகாப்பு சிந்தனைகள், மதுவிலக்கு சிந்தனைகள், மகளிர் பாதுகாப்பு சிந்தனைகள், மனித உரிமைகள் என இன்றைய வாழ்வியல் சிக்கல்களுக்குக் கம்பனில் தீர்வுகளைத் தேடி இவர் மேற்கொண்ட இலக்கிய பயணம் இலக்கிய செல்வராக மட்டுமன்றிச் சமுதாய அக்கறையாளராகவும் இவரை இனம் காட்டுகிறது. கம்பனில் இவர் படைத்துள்ள நூல்களும்,மேற்கொண்டுவரும் ஆய்வுகளும் கம்பனுக்கு மேலும் அணிசேர்க்கும். கம்பன் புகழ் பரப்பும் பணியிலும் தமிழ் இலக்கியப் பணிகளிலும் அயராது ஈடுபட்டுவரும் பேராசிரியர் முனைவர் நா. பழனிவேலு அவர்களின் தமிழ்ப் பற்றுக்குத் தலைவணங்கி உளமார வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுடன்
பேராசிரியர்
சோம. ராஜேந்திரன்

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 27-Dec-21, 8:20 pm

காலத்தை வென்ற கம்பன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே