சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 23-Jun-16, 5:30 pm
Close (X)

இலவச செல் போன் திட்டத்தை மறுபரிசீலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள்

2016 சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் இலவச செல் போன் தருவதாக அறிவித்த அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து அதற்கு மாற்றாக வேறு பொருளோ, அல்லது ரொக்கமோ வழங்க வேண்டுகிறேன்...ஏனெனில் இன்று கிராமம் முதல் நகரம் வரை செல் போன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சமாக பயன்படுத்தபட்டு வருகிறது..இருப்பினும் செல் போனை முறையாக சார்ஜ் போடுவது, முறையாக கையாள்வது போன்ற விஷயங்களை மக்கள் பின்பற்றுவதில்லை அதை எவ்வாறு பயன் படுத்தவேண்டும் என்கிற அடிப்படை அறிவும் அவர்களை சென்றடைவதில்லை..ஆகவே அஜாக்கிரதை மற்றும் விலை குறைவாக செல் போன்கள் இன்று பெருகிவிட்டதால் ஒரு அசாதாரண நிலை மக்களிடையே நிலவுகிறது..ஆகவே செல் போனை இரவு முதல் பகல் வரை சார்ஜ் போடுவது, தண்ணீர் பட்டால் கூட காற்றில் உலர வைத்து பயன் படுத்துவது, நீண்ட நேரம் உரையாடுவது போன்றவற்றால் செல் போன் வெடித்து சிதறுவது, செயல் இழந்து போவது, மின் இணைப்பை பியூஸ் செய்வது என சில பிரச்சனைகள் ஏற்படுகிறது..இது போன்ற சூழல்கள் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறினும் அது மிக பெரியதாக பேசப்படுவது குறைவே..ஆனால் அரசு அதை இலவசமாக தரும் போது அஜாக்கிரதையால் விபத்து ஏற்படினும் அதை தவறாக சுட்டி காட்டி விமர்சிப்பது..மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு இழப்பீடு கோருவது என சில பிரச்சனைகள் ஏற்பட பெரும்பாலான வாய்ப்புள்ளதால் இந்த திட்டத்தை பரிசீலனை செய்து நிறைவேற்ற மக்கள் சார்பாகவும்..செல் போன் சர்வீஸ் செய்து தரும் தொழிலை செய்து வருவதால் ஏற்பட்ட அனுபவசாலி என்கிற முறையிலும் வேண்டுகோளாக விடுக்கிறேன்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

இலவச செல் போன் திட்டத்தை மறுபரிசீலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள் மனு | Petition at Eluthu.comமேலே