சேர்த்தவர் : சந்திர மௌலீஸ்வரன்-மகி s, 7-May-18, 12:12 am
Close (X)

மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறைக்கு மனு.

மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறைக்கு மனு. மனு | Petition

மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறைக்கு மனு -- பிளாஸ்டிக் பைகல் பயன்பாட்டைக் குறைத்தல்

இக்காலத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு எல்லை கடந்து அதிகரித்துள்ளது.இவை என்றும் அழியாத இயற்கை நுண்னுயிர்களால் சித்தைக்கப் படமுடியாத் செயற்கைப் பொருட்கள்.அதனால் இவை மண்ணில் தேங்கி மழைநீர் உள்ளிறங்குவதைத் தடுக்கின்றன.குளங்களிலும் ஆறுகளிலும் கடலிலும் இவை திரண்டு சுற்றுச் சூழலிற்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
இதனால் இவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசின் சுற்றுச் சூழல் துறையும் நீர் மேலாணமைத் துறையும் பெரும் பொருட் செலவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றான.
பிளாஸ்டிக் பொருட்களை தேவைக்கு அதிகமாகத் தயாரித்து வைத்து விட்டு அவற்றின்பயன்பாட்டைக் குறைப்பது பற்றி யோசிப்பதற்குப் பதிலாக அவற்றைத் தயாரிக்கும்தொழிலகங்களிலேயே இவற்றின் உற்பத்தியைக் கட்டுப் படுத்தவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ செய்ய வேண்டும்.
எனவே, மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையும் நீர் மேலாணமைத் துறையும் சிறு தொழில் துறையும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு கீழே குறிக்கப் பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
01 - புதிய பிளாஸ்டிக் தொழிலகங்களைத் தொடங்க அனுமதி தராதிருத்தல்.
02 - ஏற்கெனவே நடைபெறும் பிளாஸ்டில்தொழிலகங்களின் உற்பத்தியை மிகக் குறைவாக
நிர்ணயித்தல்,
03 - தயாரிக்கப்படும் அனைத்து ரகப் பிளாஸ்டிக் பைகளையும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்
திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.(திரும்ப வாங்கும் முறை தற்போது கார் லாரி
பேட்டரிகளில் பின்பற்றப் படுகிறது).
04 - இயற்கை நுண்ணுயிர்களால் சிதைக்கப் பட முடியாத பாலிமெர்களுக்குப் பதிலாக
சிதையக் கூடிய பாலிமெர்களைப் கண்டறியவும், ஏற்கெனவே குவிந்துள்ள
பிளாஸ்டிக்குகளைச் சித்தைக்கும் முறைகளைக்கண்டறியவும் பிளாஸ்டிக்
தொழிலகங்களை வற்புறுத்த வேண்டும்.
05 - பிளாஸ்டிக் பைகளுக்கு சுற்றுச் சூழல் சீர்கேடு வரி அதிகமாக விதிக்க வேண்டும்.
06 - பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகப் பருத்தித் துணிகளாலான பைகளைக் குறைவான
விலையில் தயாரிக்க் சர்வோதய சங்கம், நெசவாளர் சங்கங்கள், சிறிய நெசவாலைக
ளுக்கு அரசு ஆதரவும் நிதி உதவியும் வழங்க வேண்டும்,
இந்தப் பசிந்துரைகளை ஆராய்ந்து இவற்றைத் திட்டமிட்டு நடைமுறைப் படுத்த அரசினர்
முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
சந்திர மௌலீஸ்வரன் - ம கி,

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 2 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறைக்கு மனு. மனு | Petition at Eluthu.com



மேலே