சேர்த்தவர் : கார்த்திக் s, 3-May-14, 7:34 pm
Close (X)

நச்சுதாவரமான முள் செடியை அகற்ற கோரி தமிழக அரசிற்கு விண்ணப்பம்

நச்சுதாவரமான முள் செடியை அகற்ற கோரி தமிழக அரசிற்கு விண்ணப்பம் மனு | Petition

எங்கு நோக்கிலும் கோடையிலும் சரி மழை காலத்திலும் சரி இந்த முள் செடி மட்டும் இவ்வளவு செழிப்பாக பச்சையாக இருக்கிறதே இதன் ரகசியம் ,எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.
இப்படியாக இருக்கும் இச் நச்சு செடியினை தயவு செய்து வேரோடு அழிக்க வேண்டும் அதற்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தால் அன்றி இதனை களைவது எளிதல்ல ......விவசாயத்திற்கும், நமது நாட்டின் பசுமைக்கும் கேடு தரும் வண்ணமாக வளர்ந்து படர்ந்து நிற்கும் இச்செடியினை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இது விவசாயத்திற்கு மட்டுமின்றி நமது நிலத்தடி நீரையும் தக்க வைத்து கொள்ளும் ஒரு வாய்பாக அமையும் ஆகவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் .

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 10 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

நச்சுதாவரமான முள் செடியை அகற்ற கோரி தமிழக அரசிற்கு விண்ணப்பம் மனு | Petition at Eluthu.com



மேலே