சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 30-Oct-15, 3:48 pm
Close (X)

வாகன திருட்டை தடுக்க

வாகன திருட்டை தடுக்க மனு | Petition

தற்போது செயின் திருட்டை போன்று வாகன திருட்டும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.காணாமல் போகும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைமை மிகவும் குறைவானதே என்பதும் உண்மை. மேலும் பெரும்பாலான குற்றசெயல்களை தடுக்கவும், போலி ஆவணங்கள் தயாரித்து திருடப்படும் வாகனங்களை விற்க்கும் நிலையையும் தடுக்க காவல்துறை திருடப்படும் வாகனங்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் படி இணைய தள வசதியை செய்து கொடுத்தால், முதல் உரிமையாளரிடமிருந்து இரண்டாவதாக வாகனம் வாங்க முற்படும் மக்கள் அந்த இணையத்தில் உள்ள தகவல்கள் மூலம் எதாவது திருடப்பட்ட வாகனமா என்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் தேவை இல்லாத சிரமங்களை தவிர்க எதுவாக இருக்கும்.மேலும் திருட்டு மற்றும் கொடிய குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிக்க முயலும் குற்றவாளிகளை பிடிக்கவும்,காவல் துறையின் பணியை திறம்பட செய்யவும் இரண்டாவதாக வாகனம் கை மாற்றி வாங்கி பயன் படுத்தும் நபர்கள் வாகன உரிமையை முறைப்படி மாற்றி பயன்படுத்துவதின் அவசியத்தை உணர்த்துவதன் மூலம் எந்த பிரச்னையும் இல்லாமல் குற்ற செயல்களை தடுக்க எதுவாக இருக்கும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

வாகன திருட்டை தடுக்க மனு | Petition at Eluthu.com



மேலே