கருத்துக்கணிப்பு
Karuththu Kanippu
மனைவி விருப்பத்துக்கு மாறாக கணவர் உறவு கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும்
கடந்த 2012 டிசம்பரில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவ துணை மாணவி ஜோதி சிங் ஓடும் பஸ்ஸில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நீதிபதி வர்மா அளித்த பரிந்துரையில் திருமணமான தம்பதிகளில் மனைவி விருப்பத்துக்கு மாறாக கணவர் உறவு கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்கினால் குடும்ப உறவு முறை சீர்குலைந்துவிடும் என்று நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள், மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் தேவையா? தேவை இல்லையா?