கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

16-18 வயதிலான சிறார் குற்றவாளிக்கு சிறை தண்டனை கிடையாது?


16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பக்கூடாது என 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை விலங்கிடவோ, காவலில் வைக்கவோ கூடாது. அவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கக் கூடாது. அவர்களின் பாதுகாப்புக்காக மாநில அரசுகள் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிறார் குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தீர்ப்பில் அதிருப்தியடைந்தால் சிறார்கள் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். சிறார்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, சமூகத்தில் அவர்கள் பங்களிக்க இயன்றால் அவர்களின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்து சிறார்கள் நீதிமன்றம் முடிவெடுக்கும். இவ்வாறு அந்த சட்டவரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Geeths 26-May-2016 இறுதி நாள் : 31-May-2016
Close (X)



உறுப்பினர் தேர்வு

எந்த வயது என்றாலும் குற்றத்தின் அடிப்படையிலே தண்டனை வழங்க வேண்டும்

7 votes 78%

நேர்மையான அணுகுமுறை

1 votes 11%

இது மிகவும் ஆபத்தானது

1 votes 11%

வாசகர் தேர்வு

எந்த வயது என்றாலும் குற்றத்தின் அடிப்படையிலே தண்டனை வழங்க வேண்டும்

38 votes 84%

நேர்மையான அணுகுமுறை

4 votes 9%

இது மிகவும் ஆபத்தானது

3 votes 7%


மேலே