ம்றற்மா மாற்றத்திற்குரியது
ம்றற்மா மாற்றத்திற்குரியது
<----------
வழக்கில்லை உதித்திடும் இரவிலே பகலவன்
வழியில்லை ஒளிர்ந்திடவும் பகலிலே குளிர்நிலா
வரவில்லை கீழிறங்கி வானமது கருநீல
செல்லவில்லை மேலேறிச் பூமியது பரந்திருக்கும்
நிலையிருக்க மாறாத இயற்கையிடம் நிலையான
மாற்றங்கள் அளவற்ற மனிதனிடம் நிலையற்ற
ஆங்கிலங்கள் நுணிநாக்கு ஆட்டஙகள் அரைஆடை
அடைமொழிகள் அன்னியனின் என்றழைக்க தாய்தந்தை
தேடவில்லை மாற்றங்கள் உயிரனமும் வேறெந்த
அலையவில்லை தறிகெட்டு எனும்பெயரில் நாகரீகம்
இயல்பில்லை பாடியதே தலைகீழாய்ப் ஒருகவிதை
?சுவையென்ன வாழ்வதில் தலைகீழாய் முழுவாழ்க்கை
சிறப்பாக்கும் பாதைதான் சிதறாத பண்பாடு
நேரத்தடம் சேர்ந்திட்டால் வாழ்க்கையது தலைநிமிரும்
குறிப்பு : இந்தக் கவிதையில் கடைசி வரியைத் தவிர மற்ற வரிகளை வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்.