மரணம் ஒரு பயம்

எது நினைக்காத போது வரும்
எது நினைத்த போது வராது
வெகு நேரமாகச் சிந்தித்தேன்
அது மரணம் என்று தெளிந்தேன் .


சிறு குழந்தையையும் தனியே விடாது
இளம் வாயதினரையும் வாழ விடாது
முதியவனை தவிக்க விட்டுச் செல்லும்


வாழ் நினைபவனின் வாழ்வை பறித்து விடும்
வாழ வெறுப்பவனை அணுகவே அணுகாது
மரணத்தின் தன்மை அதுவே,


மரணம் ஒரு புலப்படாத புரியாத நெறி.
யாவரையும் உறுத்தும் உணர்த்தும் ஒரு ஐயம்
மரணம் உண்டாக்குவது ஒரு பயங்கரமான் பயம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-Oct-13, 10:55 pm)
Tanglish : maranam oru bayam
பார்வை : 79

மேலே