உணர்வுகளின் ஊர்வலம்
இளைஞனே வா என்னோடு - நீ
தினமும் பார்த்த காட்சியை
என்னோடு சேர்ந்து பார்
இளைஞனே
இன்று முழுவதும்
உன்னைச் சுற்றி நோக்கு
இறுதியில் உன்னை நோக்கு
கோவிலுக்கு வா
கடவுள் இருப்பாரா?
எனக்குத் தெரியாது
ஆனால்,
கையேந்துபவர்கள் இருப்பார்கள்.
குடித்துக் கூத்தடிப்பவனே!
குப்பையைக் கிண்டி
குடித்தனம் நடத்தும் நமது
குடும்பத்தைப் பார்
களியாட்டம் ஆடுபவனே!
கல்லுடைக்கும் வேலை(ளை)யில்
காயம் பட்டாலும்
காசு இல்லாமல்
மண்தான் சிறந்த
மருந்தென்று
மனதை ஏமாற்றிக் கொள்கிறானே
அவனைப் பார்
மாடி கட்டி வாழ்பவனே!
மந்தையிலே
மறப்புக் கட்டி
மழைக்குக் கும்பிடு போட்டு
வாழும் நமது குடும்பத்தைப் பார்
பஞ்சணையில் படுப்பவனே
பாயிக்குப் பணமின்றி
மூட்டிய வேட்டிக்கு
மூன்று வேளை கொடுக்கும்
நம் சனத்தைப் பார்
அறுசுவை உணவு உண்பவனே
வயிற்றுக்கு
வழியின்றி வாடும்
வஞ்சனையின் வாசனை
அறியாதவர்களைப் பார்
அலங்காரம் செய்து கொள்பவனே!
வேப்பம் குச்சியில் பல்துலக்கி
களிமண் போட்டுக் குளித்து
வண்டி மையில் கண்ணெழுதும்
நம் சகோதிரிகளைப் பார்
கல்வி கற்கும் வயதில்
கட்டிடத்திற்கு
கலவை சுமக்கிறது
உன் சனநாயக நாட்டின்
பெருமையைப் பார்
உரிமை பற்றிச் சவடால் பேசுபவனே!
உதவி செய்வதில்
உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாதா?
சுயநலம் தான் வருகிறதா?
சுரணை வரவில்லையா?
காமம் வீசும் உனது கண்கள்
கருணை மறந்ததோ?
இது என் உணர்வுகளின் ஊர்வலம்
இதையெல்லாம்
நான் சொல்வதைக் கேட்டு
உனது மனம் சுரணை கெட்டு
செவிக்குத் திகட்டுகிறதா?
நீ வாழ்ந்து பயனில்லை
செத்துப் போ..
T .Nisha meharin
j .j college of engineering and technology
ammapettai
trichy 620009

