இறைவா
இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்
இழந்த தெவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் பரமன்
”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்.
தினமும் செய்ய வேண்டியவை
1)சோகத்தை ~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை ~Down load செய்யுங்க
5)எதிரிகளை ~Erase செய்யுங்க
6) உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை ~switch off செய்யுங்க
8)வேதனையை ~Not reachable செய்யுங்க
9)பாசத்தை ~In coming செய்யுங்க
10)வெறுப்பை ~out going செய்யுங்க
11) சிரிப்பை ~In box செய்யுங்க
12)அழுகையை ~out box செய்யுங்க
13)கோபத்தை ~Hold செய்யுங்க
14)இன்முகத்தை ~send செய்யுங்க
15)உதவியை ~ok செய்யுங்க
16)இதயத்தை ~vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்