வறுமையும்,வல்லரசும் (குழந்தைதொழிலாளி பற்றிய கவிதை )


குலக் கல்வித் திட்டம் ஒழிந்து
குழந்தைதொழிலாளி முறை
காரணம் வறுமை.
பாடப்புத்தகத்தைப் பிடிக்க வேண்டிய கையில்,
பஞ்சுமிட்டாய் விற்ற கூலிப்பணம்.

சிலேடுக்கு மாற்றாக பிளேடு,
எழுதுகுச்சிக்கு மாற்றாக பஞ்சுமிட்டாய்க்குச்சி,
பள்ளி மணி ஓசை கேட்கவேண்டிய
காதில் வியாபாரமணி ஓசை,
ஆசிரியரின் பேச்சைக் கேட்க
வேண்டிய வயதில் முதலாளியின்
ஏச்சைக் கேட்க வேண்டிய நிலை,
காரணம் வறுமை.

குழந்தைகளை தொழிலாளியாக அனுப்புவதால்
நட்டம் குழந்தைகளுக்கு,நாட்டுக்கு,வீட்டுக்கு
இலாபம் முதலாளிகளுக்கு
கருப்புப் பணம் வழியாக
என்றைக்கு குழந்தைதொழிலாளி முறை
ஒழிகின்றதோ அன்றைக்கே
இந்தியா வல்லரசு நாடு!

எழுதியவர் : -சொ.நே.அன்புமணி (22-Jun-11, 3:03 pm)
பார்வை : 1193

மேலே