மனித மாண்பு

கண்ணால் பேசி
காதல் பண்ணிவிட்டு
கல்யாணம் என்றதும்.
கரன்சி நோட்டுடன்
கண்சிமிட்டும் நகை நட்டும் -கூடவே
கனத்த ஆஸ்தியுடன்
மாப்பிள்ளைக்கு காரும் தந்தாள்
தருகின்றேன் வாழ்வு என்று
நாடகமாடும் மாண்புள்ள மனிதரிவர்.
கணவனை இழந்த பெண்
கசங்கிய பூ என்று
நசுக்கி எறிந்து
அவளிடம்
எத்தனை வசை மொழிகள்
இத்தனைக்கும்
ஆண்பிள்ளை என்றால்
மனைவியை இழந்தவன்
மறுமாதமே
மன்மத சிங்கமாய்
மாலை மாற்றும்
கோலம் காண்கையிலே
மனிதமாண்பை என்னென்போம்