என்னுள்ளே எனைத் தேடத் தேட தொலைகிறேனே...

என்னுள்ளே எனைத் தேடத் தேட தொலைகிறேனே...

நான் யார்?
உண்மையிலேயே நான் யார்?
இதற்கு விடை தேடத் தேட நான் இன்னும் தொலைகிறேனே...

நானே நான் என்பதும் பொய்,
நானே அவள் என்பதும் பொய்,
அவளே நான் என்பதும் பொய்,
அவளே அவள் என்பதும் பொய்,
இருவரும் நாம் என்பதும் பொய்.

அவளை குறை கூற எனக்குத் தகுதி உண்டா?

ஆறறிவு கொண்டவனா? சிந்திக்கும் ஆற்றல் உண்டா என்னிடம்?
அறிந்தாலும் செய்கையில் காண்பிக்கும் திறன் உண்டா?

இருக்குமெனில் நான் ஏன் என்னுள் எனைத் தேடத் தேட இன்னும் தொலைகிறேன்?
விடை கிடைக்காமல் இன்னும் ஏன் இப்படித் தொலைகிறேன்?

எழுதியவர் : நட்புடன் (21-Jun-11, 10:07 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 407

மேலே