எண்ணம்
(Eluthu Ennam)
மூடியது மூடியதாகவே இருக்கட்டும்
தலையாய கடமை செய்யும் தமிழக அரசுக்கு வணக்கம்...
நாடெங்கும் நச்சு கிருமிகளால் உயிர் பயம்...
வீடெங்கும் திறவாமல் உள்ளே மறைந்திருக்கும் மக்கள்...
ஒருவேளை உணவை மூன்று வேளை பங்கிட்டு உண்பவர் பலர்..
கல்விக்கும் ஓய்வு பல பண்ணாட்டு நிறுவனங்களுக்கும் ஓய்வு...
இறப்பு பிறப்பு என அனைத்திலும் கட்டுபாடு உடன் இருக்க ஓரிரு நபர்கள் மட்டுமே என்று...
இங்கு திருமண விழாவில் கூட இருபது நபர்களுக்கு மிகவில்லை...
பலர் தனித்துவமாய் தன் பெற்றோர் முன்னிலையில் இல்லத்திலே மணமுடித்தனர்..
ஊரடங்கு நிசப்தமாய் நிகழ பலர் ஆதரவு பெருமையே...
உன் ஊரடங்கும் பெருமையே...
பலர் இங்கு வாழ வருமானம் இன்றி வீட்டில் இருந்தது உயிர் பயத்தில்..
பல பணக்காரர்களுக்கு இது ஓய்வு நேரம்...
ஆனால் ஏழைகள் பலருக்கோ இது வாழ்வா சாவா போராட்டம்....
அரசின் உதவிதொகையால் மனம் மகிழ்ந்து பொருட்கள் வாங்க சென்றால்,
ஒரு வார கால பொருட்கள் மட்டுமே வாங்க முடிந்தது...
பரவாயில்லை பாவம் அரசு பண்ணாட்டு நிறுவனர்களுக்கு தள்ளுபடி போக குடும்பங்களுக்கு மீதம் பட்டது தலா ஆயிரம் ரூபாய் தான் போலும்....
இதில் பல தன்னார்வலர்கள் கொடுத்த உதவி தொகை என்னவாயிற்று தெரியவில்லை....
இப்படி உலகம் முழுவதும் உறைந்திருக்க,
எம் அரசு மக்கள் நலனில் அடுத்த அடியென வைத்தது....
மதுக்கடைகள் திறப்பு.....
ஆகா!!
இதுநாள் வரையில் மதுவால் இறப்பு விகிதம் குறைந்தது...
எண்ணிலடங்கா குற்ற செயல்கள் குறைந்தது...
நீதிமன்றமே நெடுநாள் விடுப்பில் இருந்தது...
குடி பழக்கத்தில் இருந்தவர் கூட குடும்ப சுகத்திற்குள் நுழைந்தனர்..
வீதியில் பலர் மது மயக்கத்தில் விழவில்லை...
மது போதையில் மானுடர் எல்லை மீறவில்லை...
சுருங்கச் சொன்னால் மது பிரியர்கள் கூட அதை மறந்து இருப்பர் போலும்...
ஆனால்.....
அரசின் மக்கள் நலனில் அடுத்த படி...
இந்த மதுக்கடைகள் திறப்பு...
இனி ஏன் இந்த ஊரடங்கு...
பலர் குடி கெடுக்கவா...????
ஆளுங்கட்சி அமல் படுத்தினால் எதிர் கட்சி எதிர்ப்பு..
உங்கள் அனைவரது மாமா பணிகளும் எதற்காக...
மக்களை மடையர்கள் என்று நினைப்பதாலா???
குமுறும் ஒவ்வொரு மனிதனின் முன்பும் அரசியல்வாதி என்ற போலி போர்வையில் நீ வந்து நின்றால்..
அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இன்றி நீ மானம் இழந்து சாவாய் உன் பிறப்பு சரியெனில்....
தான் தங்கையையோ,
தான் மகளையோ
மது போதையில் ஒருவன் கற்பழித்தால் அன்றும் மது கடைகள் வேண்டும் என்று சொல்வீர்களா?? ( மன்னிக்கவும் )
தன் மகன் மது போதையில் குற்றம் செய்வானாயின் ஏற்று கொள்வீர்களா??
உங்களை நம்பி பதவி தந்தது மக்களை காப்பாற்ற...
ஏழை எளியவர்களுக்கு பணி செய்திட...
எம் மக்களை ஏமாற்றாதே அரசே... ஏழைகள் வயிற்றில் அடிக்காதே....
மூடிய மதுக்கடைகள் மூடியதாகவே இருக்கட்டும்...
வரிகளை ஏற்றி அரசின் வருமானத்தை ஈட்டும் நீங்கள்...
இந்த மதுக்கடைகளை மூடி மக்களை வாழ செய்யுங்கள்...
நல்லாட்சி புரியுங்கள்.....
இறந்து போகும் மானுட உடலுக்கு மரியாதை சேர்த்தால் போதும்...
பணம் சேர்க்க தேவையில்லை....
எழுத்துரு எண்ணங்கள்..
பா.மாதவன் மன்னார்குடி...