இன்னிசை அளபெடை
(Innisai Alapedai)
இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது.
உதாரணம்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இந்த திருக்குறளை,
கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.
என்று எழுதினாலும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படியிருக்க இன்னிசைக்காக அளபெடை கூட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.