உனக்கான பதில்களை

உனக்கான பதில்களை
என்னிடமிருந்து
நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிற போதெல்லாம்
தலைமுறைகளைத்
தாண்டிய நம்
பாட்களின்
உறைந்து கிடைக்கும்
மௌனங்களையெல்லாம்
உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான்
கருதுகிறேன்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:59 pm)
பார்வை : 22


பிரபல கவிஞர்கள்

மேலே