தமிழ் கவிஞர்கள்
>>
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
>>
கரம் சாயா
கரம் சாயா
சாயா... சாயா... கரம்சாயா.... கரம்சாயா
ஓரணாதான்யா சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா வாய்யா வாய்யா (கரம்சாயா)
வேலைக்கில்லாமே வீண் செலவாகும்
மூளைக்கு மருந்து சாயா
வேடிக்கையான ஜோடிக்கும் சிமான்
ஜாலிக்கும் விருந்து சாயா
வேளைக்கு வேளை வீட்டுக்கு வீடு
வேண்டிய நண்பன் சாயா
வெளியிலே அறையிலே கடையிலே கப்பலிலே
சபையிலே குடிப்பது சாயா.. ஏன்யா? (கரம்சாயா)
கொழுந்துத் தேயிலே குளிரும் பனியிலே
கொழுக்கும் மலையிலே வெளைஞ்சுது;
கொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே
குணமும் மணமும் நிறைஞ்சது
மேடையிலே பேசும் லீடரும் போலீஸ்
வீரரும் விரும்பிக் கேட்பது;
நாடகம் சினிமா நாட்டியமாடும்
தோழரும் வாங்கிச் சுவைப்பது
மூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்
ஏலமும் சுக்கும் கலந்தது;
இரவிலே பகலிலே ரயிலிலே வெயிலிலே
ஏரோப் பிளேனிலே கிடைப்பது (கரம்சாயா)