ஐலசா

நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்?
நியாயம் பார்க்காமல்
நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்?

இன்றா? நேற்றா? கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே!
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே!

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!

ஹே... மோதல் ஒன்று காதல் என்று
மாறக் கண்டேனே நானும் இன்று
மூளை சொல்லும் பாதை செல்ல
நெஞ்சம் கேட்காமல் நின்றேன் இன்று

எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ளே...
எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ளே...
கிளியொன்றாய் சிக்கிக்கொண்டு
அதன் போக்கில் திசைமாறி
நான் போகின்றேன்!

சரியா? தவறா? கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே!

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 2:58 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே