ஒசக்க தேனி காத்தோட வணக்கம் சென்னை

தேனி காத்தோட
தேனத் தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா!
தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா!

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே...

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!

ஹே... ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா.
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா.

இந்த வயக்காட்டு மத்தியில...
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொண்ணா துள்ளிக்கிட்டு
புயலொண்ண நெஞ்சில்நட்டு
ஏன் போனாளோ?

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே...

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!

ஹே... கண்ண தெறந்தாலும் கலையவில்ல
கனவா நனவான்னு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல

என் கண் பாக்கும் தூரம் வர….
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல்
நான் போனேனே!

ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 2:58 pm)
பார்வை : 0


மேலே