யாரால் செமிக்க முடியும்

ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்


கவிஞர் : கலாப்ரியா(21-Apr-12, 6:01 pm)
பார்வை : 30


மேலே