கலாப்ரியா குறிப்பு

(Kalapriya)

 ()
பெயர் : கலாப்ரியா
ஆங்கிலம் : Kalapriya
பாலினம் : ஆண்
பிறப்பு : 1950-07-30
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : சோமசுந்தரம்.

கலாப்ரியா தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.

கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சின்ன வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி.மு.க தொண்டனாக தீவிரமாக இயங்கினார்.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்ப) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். 'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.

பாலுணர்வு வெளிபாடுகளும், சில வேளைகளில் வன்முறையும் கலாப்ரியாவின் கவிதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.

கவிதைத் தொகுப்புகள்:
வெள்ளம்
தீர்த்தயாத்திரை
மற்றாங்கே
எட்டயபுரம்

விருதுகள்:
திருப்பூர் தமிழ் சங்க பரிசு.
வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது.
கலைமாமணி
கலாப்ரியா கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே