சாப்பாடில்லாத பிள்ளைகள்

சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.


கவிஞர் : கலாப்ரியா(21-Apr-12, 5:59 pm)
பார்வை : 31


மேலே